இனிமையைக் கண்டேன் ✏✏

உன்னைப் போல் நண்பனைத் தேடி எனைப்போல் அலைந்திடும் உயிர்களும் கோடி……

உயிராய் இருக்கும் நண்பனே , நீயோ எனக்குள் ஒருவன் உன்னை நான் பெற்றதால் நானோ ஆயிரத்திலொருவன் !!

ஊரெல்லாம் திரிந்தோம் ஓய்வின்றி அலைந்தோம் அளவின்றிச் சிரித்தோம் …எல்லாம் முடிந்துவிட்டன இன்று. ..

தொலைவால் தொலையாது நம் நட்பு என அறிந்தும் , உண்மைகள் புரிந்தும் நீ பிரிந்ததை நினைந்திடும் பொழுது கண்களின் ஓரம் வழிந்தது துளிகளால் ஈரம் !!!

நடித்திடும் உலகில் துடித்திடும் உறவாய் வந்தவனே , சிரித்திடும் பொழுதும், கலங்கிய பொழுதும் துணையாய் என்னுடன் நின்றவனே !!

தென்றல் தொட்டுச் சென்றால் இனிமை நட்பு விட்டுச் சென்றால் தனிமை இனிமையைக் கண்டேன் அன்று தனிமையில் நின்றேன் இன்று !!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s