மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா? தொடர் – 2

11. நெஞ்சம் திறந்து வெளிக்கு வா! பூஞ்சோலைகளைக் கொஞ்சம் பார்! அல்லாஹ்வின் அற்புத படைப்பு களைப் பார்த்து மன அழுத்தங்களை குறைத்துக் கொள்!

12. நடைப் பழக்கம் மிக அவசியம். உடற்பயிற்சி மிக நல்லது. சோம்பேறித்தனம், முடங்கிக் கிடப்பது, சோர்ந்து போவது வேண்டாம். வேலையின்றி இருப்பதையும் வீணாக பொழுதைக் கழிப்பதையும் முற்றிலும் தவிர்த்து விடு!

13. முடிந்தால் வரலாற்றைப் படி! நடந்து போன ஆச்சரியமான நிகழ்வுகளை, அற்புதமான சம்பவங் களை சிந்தித்து ஆராய்ந்து பார்! அதில் பதிவான செய்திகள், சம்பவங்களைப் படித்து இன்புறு!

14. உன் வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டே இரு! வாழ்வின் அமைப்புகளை ஒரு முறையிலிருந்து, அடுத்து மேலான முறைக்கு மாற்றிக் கொண்டே இரு! ‘ROUTINE’ என்ற சடைவூட்டும் தொடர் செயல்களை முடிந்தளவு மாற்றி மாற்றி செய்.

15. அடிக்கடி தேனீர் அருந்துவது, உற்சாக பானங்களைப் பயன்படுத்துவதை விட்டுவிடு! புகைப்பதை முற்றிலும் நிறுத்திவிடு! அதில் எச்சரிக்கையாய் இரு! மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா?

16. உன் உடல், உடையை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனமாக இரு! பல்துலக்கி, நறுமணம் பூசி இரு!

17. நிராசை, நம்பிக்கையின்மை, துர்சகுணம் பார்த்தல், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றைத் தூண்டும் புத்தகங்களை அறவே படிக்காதே!

18. நினைவில் வை! “உன் இறைவன் விசாலமான மன்னிப்புடையவன். பிழைபொறுப்புத் தேடலை ஏற்பவன். தன் அடியார்களை மன்னித்து பாவங்களை நன்மைகளாக மாற்றிவிடுபவன்.”

19. இறை மார்க்கம், அறிவு, உடல், சுகம், தன் குறைகள் மறைக்கப்பட்டிருத்தல் செவி, பார்வை, வாழ்வாதாரம், குடும்பம், சந்ததி, இப்படி இன்னும் எத்தனையோ இறை அருள்களை நினைவு கூர்ந்து உன் இறைவனுக்கு நன்றி செலுத்து!

20. பலரைப் பார்! சிலர் பைத்தியமாக, புத்தி பேதலித்த வர்களாக, உடல் ஆரோக்கியமற்றவர்களாக, கைதிகளாக, உடல் ஊனமுற்றவர்களாக இருப்பதைப் பார்! இப்படி எத்தனையோ பிரச்சனைகளில் சிக்கியவர்களைப் பார்!

21. குர்ஆனோடு வாழ்! அதை மனனம் செய்! அதை ஓது! அதைக் கேள்! அதை சிந்தித்துப் பார்! நிச்சயமாக குர்ஆன் கவலைகளை விரட்டுவிடுதவற்கு மிகப்பெரிய சிகிச்சையாகும்.

22. பொறுப்பை அல்லாஹ்வின் மீது சாட்டி விடு! அவனை நம்பிவிடு! காரியங்களை அவனிடம் ஒப்படைத்துவிடு! அவனது தீர்ப்பை, விதியை ஏற்று பொருந்திக்கொள்! அவனை அண்டிவிடு! அவன் பக்கம் ஒதுங்கிவிடு! அவனையே சார்ந்துவிடு! அவனே உனக்கு போதுமானவன். உன்னைக் காப்பவன்.

23. உனக்கு அநீதி இழைத்தவனை மன்னித்துவிடு! உன்னை வெட்டியவர்களை சேர்த்துக்கொள்! உனக்கு கொடுக்காதவர்களுக்கும் கொடுத்து உதவு! உமக்கு கெடுதி செய்பவர்களை சகித்து புறக்கணித்து விடு! கண்டிப்பாக மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அடைவாய்.

24. ‘லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ்’வை ஓதிக் கொண்டே இரு! இந்த இறைநினைவு உள்ளத்தை விரிவாக்கும்; நிலைமையை சீர் செய்யும்; சுமைகளை அதைக் கொண்டுதான் சமாளிக்க முடியும். அல்லாஹ்வை திருப்திபடுத்த முடியும்.

25. பாவமன்னிப் தேடிக்கொண்டே இரு! அதனால் உணவு வசதி, மகிழ்ச்சி, சந்ததி, பலன்தரும் கல்வி, காரியங்கள் இலகுவாக்கப்படுதல், பாவங்கள் மன்னிக்கப்படுதல் இவற்றையெல்லாம் நீ பெறலாம்.

26. உனக்கு அல்லாஹ் கொடுத்த தோற்றம், திறமை, வருமானம், குடும்பம் ஆகியவற்றைக் கொண்டு திருப்தி கொள். நிச்சயம் மன நிம்மதியும் மன மகிழ்ச்சியும் பெறுவாய்!

27. சிரமத்திற்குப் பின் இலகுவும் துன்பத்திற்குப் பின் இன்பமும் உண்டு. நிலைமைகள் எப்போதும் ஒரே நிலையில் இருக்கா. நாட்கள் (கிணற்று வாளிகளைப் போல்) சுற்றிக் கொண்டும், சுழன்று கொண்டும்தான் இருக்கும்.

28. நல்லதை நினை! நல்லதை எண்ணு! நிராசையாகதே! நம்பிக்கையை இழக்காதே! உன் இறைவன் மீது நல்லெண்ணம் வை! அவனிடமிருந்து நன்மைகளை யும் நல்லவற்றையும் எதிர்பாத்திரு.

29. அல்லாஹ் உனக்கென தேர்ந்தெடுத்ததைக் கொண்டு மகிழ்ச்சியுறு! நன்மை எதுவென நீ அறியமாட்டாய். சிலநேரம் வசதியைவிட நெருக்கடியே உனக்கு நன்மையாக இருக்கலாம்.

30. சோதனை உன்னை அல்லாஹ்வுடன் நெருக்கமாக்கி வைக்கும். அது பிரார்த்தனைகளை உமக்கு கற்பிக்கும். உன்னை இறைவனிடத்தில் மன்றாட வைக்கும். உன்னைவிட்டு தற்பெருமை, கர்வம், ஆணவத்தை அகற்றிவிடும்.

Be continue in part3

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s