மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா ? தொடர் – 4

51. சுன்னாவைப் பின்பற்று! மார்க்கத்தில் நடு நிலையைப் பேணு! நடுப்பாதையில் செல்! வரம்பு மீறி விடாதே!!

52. தவ்ஹீதை பரிசுத்தமாக வைத்துக் கொள்! உனது நெஞ்சம் விசாலமாக இருக்கும், உனது தவ்ஹீதும் இக்லாசும் சுத்தமாக இருக்கும் அளவுக்குத்தான் உனது மகிழ்ச்சி இருக்கும்.

53. வீரனாக இரு! உள்ளம் உறுதியுடையவனாக இரு! திடமான மனதுடன் இரு! உன்னிடம் உறுதியும்! வீரமும், பிடிப்பும் இருக்க வேண்டும். மயங்கி விடாதே! பயந்து விடாதே!

54. கொடை கொடு! கொடையாளி, என்றும் உள்ளம் விரிந்தவன், மகிழ்ச்சியானவன். கஞ்சன் நெஞ்சம் நெருக்கடியானவன், உள்ளம் இருண்டவன், உள்ளம் அசுத்தமானவன்.

55. மக்களுக்கு முன் முகம் மலர்ந்திடு! அவர்களின் அன்பை பெறுவாய். அவர்களிடம் மென்மையாகப் பேசு! உன்னை நேசிப்பார்கள். அவர்களுக்கு முன் பணிவாக இரு! உன்னை மதிப்பார்கள்.

56. அழகிய முறையில் எதையும் அணுகு! நல்லதைக் கொண்டு தீயதைத் தடு! மக்களிடம் மென்மையாக இரு! பகைமையை அணைத்து விடு! உன் எதிரிகளிடம் சமாதானம் செய்! உனது நல்ல நண்பர்களை அதிகப்படுத்திக் கொள்!!

57. நற்பாக்கியத்தின் மாபெரும் வாயில் பெற்றோரின் பிரார்த்தனை. எனவே, அவர்களுக்கு நன்மை செய்து, அதை கொள்ளைக் கொள்! அவர்களது துஆ உனக்கு தீங்குகளை விட்டும் பாதுகாக்கும் அரணாக அமையும்.

58. மக்களை அவரவர்களிடம் இருக்கும் தன்மைகளுடன் ஏற்றுக் கொள்! அவர்களிடம் தோன்றும் குறைகளை பெருந்தன்மையுடன் விட்டு விடு! இது தான் மக்களிலும் வாழ்க்கையிலும் அல்லாஹ்வின் நடைமுறை.

59. யதார்த்த வாழ்க்கையைப் பார்! அதில் வாழ்! அதிகம் எதிர்பார்க்காதே! உன்னால் முடியாததை பிறரிடம் நீ தேடாதே! நீதமாக இரு!!

60. சாதாரணமாக, எளிமையாக இரு! பகட்டை, ஆடம்பரத்தை, வீண் விரயத்தை விட்டு விலகு! உடல் அதிக சுகம் காணும்போது உள்ளம் இருகி விடுகிறது.

61. அன்றாடம் நீ பழகுகின்ற உன் உறவினரோ, அல்லது நண்பரோ, சகோதரர், மகன், மனைவி என யாராக இருந்தாலும் அவரிடம் ஏதாவது ஒரு குறை கண்டிப்பாக இருக்கும். அனைவரையும் ஏற்றுக்கொள்ள உன்னை பழக்கப்படுத்திக்கொள்!

62. உனக்கு இறைவன் புறத்திலிருந்து வழங்கப்பட்ட ஆற்றலை தக்க வைத்துக்கொள்! உனக்கு விருப்பமான கல்வியை தக்க வைத்துக்கொள்! உனக்கு இலகுவாக்கப்பட்ட வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்! உனக்குப் பொருத்தமான வேலையை தக்க வைத்துக் கொள்!

63. பிறரையோ, பிற அமைப்புகளையோ குறை கூறாதே காயப்படுத்தாதே! நல்ல பேச்சுகளையும் இனிமையான சொற்களையும் பிறரை காயப்படுத்தாத நாவையும் உடையவனாக இரு! பிறருக்குத் தீங்கு தராதவனாக இரு!

64. தாங்கிக்கொள்வது குறைகளை குழிதோண்டி புதைத்துவிடும். சகித்துக் கொள்வது, தவறுகளை மறைத்துவிடும். கொடைத்தன்மை, குற்றங்குறைகளை எல்லாம் மறைக்கக்கூடிய விசாலமான ஓர் ஆடையாகும்.

65. உனக்கென ஒரு நேரத்தை ஒதுக்கி, அதில் உனது காரியங்களைத் திட்டமிடு. உன்னை அதில் மறு பரிசீலனை செய்! உன் மறுமையை சிந்தித்துப்பார்! உன் உலக காரியங்களை சீர்படுத்திக்கொள்!

66. உனது வீட்டில் உள்ள நூல் களஞ்சியங்கள், அது உனக்கு ஓர் அடர்ந்த பூங்காவாகும். அதில் அறிஞர்கள், ஞானிகள் ,கவிஞர்கள் ,இலக்கியவாதிகள் ஆகியோருடன் நீ பேசி மகிழலாம்.

67. ஹலாலான வாழ்வாதாரத்தை தேடு! ஹராமை விட்டு உன்னைப் பாதுகாத்துக்கொள்! மக்களிடம் யாசிக்காதே! வேலையை விட வியாபாரம் சிறந்தது! உன் பொருளை வியாபாரத்தில் ஈடுபடுத்து. வாழ்க்கையில் நடு நிலையாக வாழப் பழகு!

68. ஆடையில் நடு நிலையான ஆடையை உடுத்து! பகட்டு ஆடம்பர விரும்பிகளின் ஆடையையும் அல்ல, பஞ்சத்தில் வாடுகின்றவனின் ஆடையையும் அல்ல. உனது ஆடையால் உன்னை விளம்பரப்படுத்த நாடாதே! பொதுமக்களைப் போன்றே இரு.

69. கோபப்படாதே! கோபம் உன் சுபாவத்தையும், உன் மன நிலையையும் கெடுத்துவிடும். குணத்தை மாற்றி விடும். பழக்கத்தை பாழ்படுத்திவிடும். அன்பை முறித்துவிடும். உறவை துண்டித்துவிடும்.

70. உன் வாழ்வை புதுப்பிப்பதற்காக மற்ற சில உலகங்களையும் நீ படிப்பதற்காக புதிய அடையாளங்களைப் பார்ப்பதற்காக வேறு பல ஊர்களையும் நீ தெரிந்து கொள்வதற்காக சில நேரங்களில் சில பயணத்தையும் மேற்கொள்! ஏனெனில் பயணமும் ஓர் இன்பம்தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s