நபிமார்கள் கேட்ட துஆக்கள் 02

images (1)

26. குழந்தை பாக்கியம் பெற

நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبِّ لا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ )

“என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன.” (அல்குர்ஆன் 21: 89)

 

27. நிராகரிப்பவர்களுக்க எதிராக நாம் வெற்றி பெற

நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبِّ احْكُم بِالْحَقِّ وَرَبُّنَا الرَّحْمَنُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ )

“என் இறைவா! சத்தியத் தீர்ப்பு வழங்குவாயாக! என்று கூறினார். எங்கள் இறைவனோ அறவற்ற அருளாளன். நீங்கள் வர்ணிப்பதற்கு எதிராக உதவி தேடப்படுபவன்.” (அல்குர்ஆன் 21: 112)

 

28. தங்குகின்ற இடத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்பட

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَّبِّ أَنزِلْنِي مُنزَلا مُّبَارَكًا وَأَنتَ خَيْرُ الْمُنزِلِينَ )

“இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள – இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்தரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்.” (அல்குர்ஆன் 23: 29)

 

29. இம்மை மறுமை உயர்பதவி பெற

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ

وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الآخِرِينَ

وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ

وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ

وَلا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ

يَوْمَ لا يَنفَعُ مَالٌ وَلا بَنُونَ

إِلاَّ مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ

”இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!””

”இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”

”இன்னும், பாக்கியம் நிறைந்த சவனபதியின் வாரிஸ

{க்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”

”என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்.””

”இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக் குள்ளாக்காதிருப்பாயாக!”

”அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.””

”எவரொருவர் பரிசத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).” (அல்குர்ஆன் 26: 83 -89)

 

30. தீய செயல்களிலிருந்து பாதுகாப்புப் பெற

நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ )

”என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!” (அல்குர்ஆன் 26: 169)

 

31. நற்செயல்கள் அதிகமாக

நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ )

“என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” (அல்குர்ஆன் 27: 19)

 

32. அநியாயக்காரர்களிடம் இருந்து பாதுகாப்புப் பெற

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي

قَالَ رَبِّ بِمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًا لِّلْمُجْرِمِينَ

رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ )

“என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!”

”என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்”

”என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!”” (அல்குர்ஆன் 28: 16, 17, 21)

 

33. வலிமை ஏற்பட

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ )

“என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” (அல்குர்ஆன் 28: 24)

 

34. அல்லாஹ்வின் உதவி பெற

நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ )

“என் இறைவனே! குழப்பம் செய்யும் இற்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” (அல்குர்ஆன் 29: 30)

 

35. சாலிஹான குழந்தை பிறக்க

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ )

“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (அல்குர்ஆன் 37: 100)

 

36. மறுமையில் அதிகமான நற்கூலி பெற

நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ

وَسَلامٌ عَلَى الْمُرْسَلِينَ

وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ )

“அவர்கள் வர்ணிப்பதை விட்டும் கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.

மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.

வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீம் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).” (அல்குர்ஆன் 37: 180, 181, 182)

 

37. பிரயாண துஆ

நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ

وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ )

“இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசத்தமானவன்.

‘மேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள்.” (அல்குர்ஆன் 43: 13, 14)

 

38. இறை நம்பிக்கை அதிகமாக

நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( ذَلِكُمُ اللَّهُ رَبِّي عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ )

“அவன் தான் அல்லாஹ் – என்னுடைய இறைவன்; அவன் மீதே நான் முற்றும் நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன்.” (அல்குர்ஆன் 42: 10)

 

39. நிராகரிப்பவர்களின் பிடியில் சிக்காமல் இருக்க

நபி இப்ராஹீம்; அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

رَبَّنَا لا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ )

“எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”

”எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்”” (அல்குர்ஆன் 60: 4, 5)

 

40. விசுவாசிகள் அனைவரும் மன்னிக்கப் பெற

( رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ )

”என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும்> முஃமினான பெண்களுக்கும்,நீ மன்னிப்பளிப்பாயாக! (அல்குர்ஆன் 71: 28)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s