சோகம் வேண்டாம்

சோகத்தின் மீது எச்சரிக்கையாக இருங்கள்
(احذروا الحزن) ⚠

இப்னு அல் கய்யிம் (அல்லாஹ் அவர்மீது கருணை புரிவானாக) الحزن (சோகம்) என்ற வார்த்தை தடை செய்யப்பட்ட நிலையிலும்
(ولا تهنو ولاتحزنوا) மற்றும் விலக்கப்படுவதற்குரிய நிலையை தவிர வேறு எங்கும் குர்ஆனில் இல்லை (فلاخوف عليهم ولا هم يحزنون)

💞இதற்கான காரணம் என்னவென்றால் உள்ளத்தில் சோகம் இருப்பதால் எந்த நன்மையும் இல்லை. ஷைத்தானுக்கு மிகவும் விருப்பமான செயல் நல்லடியார்களை சோகத்திலாக்கி வழிகெடுக்கச்செய்வது.

❤நபி (صلى الله عليه وسلم ) அவர்கள் அல்லாஹ்விடத்தில் சோகத்திலிருந்து

(اللهم إني أعوذ بك من الهم والحزن)
பாதுகாப்பு தேடினார்கள்.

💞இப்னு அல் கய்யிம் رحمه الله கூறினார்கள்: சோகம் இதயத்தை பலகீனம் ஆக்குகிறது மேலும் உறுதியையும் முன்னோக்கி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தையும் குறைக்கிறது. நல்லடியானின் சோகத்தைவிட ஷைத்தானுக்கு மிகவும் விருப்பமானது வேறெதுவும் இல்லை.

💞இந்த காரணத்திற்காக மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையாகவும், அல்லாஹ் سبحان وتعالى வை பற்றி (سبحانه الله وتعالى) நல்லதாக நினையுங்கள் அல்லாஹ் سبحان وتعالى வின் வல்லமை மீது நம்பிக்கையுடனும் அல்லாஹ் سبحان وتعالى வை சார்ந்தும் இருங்கள். எல்லா சூழ்நிலையிலும் மகிழ்ச்சியும் இன்பமும் அடைவீர்கள்.

💞இப்னு அல் கய்யிம் رحمه الله கூறினார்கள், உங்கள் மகிழ்ச்சியை வருத்தத்தைக் கொண்டு அழிக்காதீர்கள், எண்ணங்களை அவநம்பிக்கையை கொண்டு அழிக்காதீர்கள், வெற்றியை மோசடியைக்கொண்டு அழிக்காதீர்கள், மற்றவர்களின் நம்பிக்கையையும் அழிக்காதீர்கள், நேற்று நடந்ததை யோசித்து இன்றைய தினத்தை அழிக்காதீர்கள்.

💞 உங்கள் நிலையை நன்று யோசித்துப் பார்த்தால் அல்லாஹ் سبحان وتعالى நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு வேண்டியது அருளியிருக்கிறான் என்பது விளங்கும், அல்லாஹ் سبحان وتعالى உங்களுக்கு வேண்டிய எதையும் தடுத்ததில்லை அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும் பட்சத்தில் எனவே அல்லாஹ் سبحان وتعالى வின் மீது நம்பிக்கை வைத்திருங்கள்.

💞நீங்கள் உறங்கிக் கொண்டிருப்பீர்கள், உங்களால் கேட்கப்பட்ட துஆவினால் சுவர்கத்தின் கதவு திறக்கப்பட்டிருக்கும். سبحان الله: ஒருவேளை நீங்கள் ஏழைக்கு உதவியிருக்கலாம், சோகத்திலிருந்த ஒருவரை மகிழ்வித்திருக்கலாம், உங்களை கடந்து சென்றவரைப் பார்த்து நீங்கள் சிரித்திருக்கலாம், அல்லது ஒருவரின் கலக்கத்தை நீங்கள் போக்கியிருக்கலாம். எனவே எந்த நன்மையும் குறைத்து மதிப்பிடப்படாதீர்கள்.

💞நம்முடைய முந்தைய ந்ல்லடியார்கள் இவ்வாறு கூறினார்கள்,
நான் அல்லாஹ் سبحان وتعالىவிடம் எனக்காக வேண்டிக்கேட்டு அல்லாஹ் سبحان وتعالى அதைக்கொடுத்தால் ஒரு மடங்கு மகிழ்ச்சியாக இருப்பேன் கொடுக்கவில்லை என்றால் பத்து மடங்கு மகிழ்ச்சியாக இருப்பேன், ஏனெனில் முதலாவது என்னுடைய தேர்வு இரண்டாவது அல்லாஹ் سبحان وتعالى வுடைய தேர்வு.

💞அஸ் ஸ’அதி (அல்லாஹ் அவர்மீது கருணை புரிவானாக) கூறினார்கள், வாழ்க்கை மிகவும் குறுகியது அதில் கவலை, துக்கம் மற்றும் சோகத்தைக்கொண்டு குறைத்துவிடாதீர்கள்.

💞எனவே திருப்தி மற்றும் மகிழ்ச்சியை சுவாசிக்கும் உள்ளத்திற்கு எஜமானாக இருங்கள்.

💞அல்லாஹ் سبحانه الله وتعالى உங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக்கி, நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து அருள்புரிவானாக.

اللهم امين

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s